புதிய பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து பாம்பன் ரெயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி




பாம்பன் புதிய பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாம்பன் ரெயில் பாலம்

பாம்பன் கடலில் ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து பாம்பன் ரெயில் நிலையம் வரையிலான சுமார் 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாள பாதைகள் அமைக்கும் பணி 3 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. அதற்காக பாம்பன் புதிய ரெயில்வே பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து சின்னப்பாலம் ரெயில்வே கேட் வரை சுமார் 650 மீட்டர் தூரத்தில் இருந்த பழைய ரெயில்வே தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் செம்மண் கொட்டப்பட்டு தண்டவாளப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

புதிய தண்டவாளம்

இந்த பணிக்காக லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டு புதிய பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து பாம்பன் ரெயில்வே நிலையம் வரை தண்டவாளத்தில் ஓடியபடி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு தண்டவாளங்களை சமதளப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை நடைபெறும் தண்டவாளங்கள் அமைக்கும் பணி இன்னும் ஒருசில வாரங்களில் முழுமையாக நிறைவடையும் என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய ரெயில் பாதைக்காக நடைபெற்று வரும் தண்டவாள பணிகளை பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments