மானாமதுரையில் இருந்து விளாத்திகுளம் வரை புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என தர்மர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
புதிய ரெயில் பாதை
நாடாளுமன்றத்தில் ெரயில்வே திட்டம் குறித்து தர்மர் எம்.பி. பேசியுள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு தற்போதுள்ள ெரயில் பாதையின் தூரம் 652 கி.மீ. அருப்புக்கோட்டை - விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி வரை அமைக்கப்படும் புதிய ெரயில் திட்டத்தின் தூரம் 660 கி.மீ. இந்த 2 வழித்தடங்களும் மதுரை மற்றும் திருச்சி சந்திப்புகள் வழியாக செல்கின்றன. ஆனால் தூரம் குறைவாக இல்லை.
மதுரை சந்திப்பு வழியாக செல்லாமல் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு மாற்று ெரயில் பாதை அமைக்கலாம். அதற்கு மானாமதுரையில் இருந்து பசும்பொன், கமுதி, பெருநாழி வழியாக விளாத்திகுளம் வரை வெறும் 83 கி.மீ. தூரம் தான் ஆகும்.
2 இணைப்புகள்
மானாமதுரை சந்திப்பு தவிர காரைக்குடி சந்திப்பும் இந்த வழித்தடத்தில் இணைக்கப்படுவதால் சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக தூத்துக்குடிக்கு மற்றொரு இணைப்பு இருக்கும். எனவே சிறிய புதிய ெரயில் பாதை திட்டத்தை அமைத்தால் தற்போதுள்ள மதுரை-கோவில்பட்டி வழித்தடத்தை தவிர சென்னை - தூத்துக்குடி இடையே மேலும் 2 ெரயில்கள் இணைப்புகளை பெற முடியும்.
ஒன்று திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, கமுதி விளாத்திகுளம் வழியாகவும் மற்றொன்று விழுப்புரம் திருவாரூர், பட்டுக்கோட்டை காரைக்குடி, மானாமதுரை வழியாகவும் செல்லலாம். இதில் புதுச்சேரி இணைப்பையும் பெறலாம். இந்த திட்டத்தால் ஏராளமான நன்மைகளும் உள்ளன.
ராமநாதபுரம் வளர்ச்சி பெறும்
அதாவது கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களை இணைக்கும் இந்த ெரயில் பாதை இருப்பதன் மூலம் வழித்தடம் கிழக்கு கடற்கரை பாதைக்கு மாற்றாக அமையும். தூத்துக்குடி துறைமுகம் அதிக சரக்குகளை கையாளும் துறைமுகமாக முன்னேற்றம் அடையும். தென் மாவட்ட மக்கள் வேலை வாய்ப்புக்காக வட மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் குறைந்த தூரத்தில் செல்ல முடியும். வறட்சியான ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சி பெறும். தமிழ்நாடு முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்லும்.
மேலும் பசும்பொன் தேவர் ஜெயந்திவிழாவிற்கு வருபவர்களுக்கு இந்த புதிய இணைப்பு பாதை உதவிக்கரமாக அமையும்.
இந்த திட்டம் ஏற்கனவே காமராஜர் ஆட்சியில் மீட்டர் கேஜ் பாதையாக எடுக்கப்பட்டது. பின்பு 1999-ல் அகல ெரயில் பாதைக்கும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆகவே தற்போது இதற்கு சில மாற்று வழிகளுக்கு மட்டுமே ஆய்வு தேவைப்படலாம். நிலம் பெரும்பாலும் தரிசு நிலமாக இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதற்கு சிரமம் இருக்காது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்.
விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ெரயில்வே மந்திரி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.