தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடக்கம்




தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டன.

தமிழ் புதல்வன் திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தில் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கவும், வங்கி கணக்கு ஏற்கனவே வைத்திருந்தால், அதில் ஆதார் எண் இணைத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு முகாம்கள் கல்லூரிகளில் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கியை சேர்ந்த குழுவினர் மாணவர்களுக்கு வங்கி கணக்கை தொடங்கி வைத்தனர். மேலும் அவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்பட்டன.

900 மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 28 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 250 பேருக்கு வங்கி கணக்கு புதுப்பித்தல் பணியும் செய்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற முகாமை கலெக்டர் அருணா நேற்று பார்வையிட்டார்.

அப்போது மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்தநிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தக்குமார், மன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments