கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்களுக்கு ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு





கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்களுக்கு  ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 02-08-2024 அன்று பெரிய பள்ளிவாசல் நமது ஊர் பொதுமக்களின் மகா சபையில் அனைவரின் சம்மதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

கோபாலப்பட்டிணம் ஹாஜி. RSM. முகம்மது அன்சாரி தலைமையிலான ஜமாஅத் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

1) தங்கமஹால் திருமண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை ரூ.12,000 (பண்ணிரண்டு ஆயிரம் ரூபாய்)

2) திருமணங்களில் எடுக்கும் வீடியோ கவரேஜ்களுக்கு ரூ.3,000 (மூன்றாயிரம் ருபாய்)

3) ஊருக்கு கொடுக்கும் கடிதங்களுக்கான கட்டணம் ரூ.100 (நூறு ருபாய்)

4) நமது ஜமாஅத்தை சார்ந்த உள்ளூர் (கோபாலப்பட்டிணம், மீமிசல்) பகுதியில் தொழில் செய்துவரும் கடைகளுக்கு குறைந்தபட்ச மாதச்சந்தாவாக ரூ. 200 (இரு நூறு ) நிர்ணயிக்கப்படுகிறது.

திருமணங்களுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) பெற தேவையான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள்:

1)ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்

2) புகைப்படங்கள் 3

3) திருமணம் நடக்க இருக்கும் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு முன்பு மேற்க்கண்ட ஆவணங்களை ஜமாஅத் நிர்வாகிகளிடம் சமர்ப்பித்து NOC பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4) மணமகனுக்கு குறைந்தபட்ச வயது : 21

5) மணமளுக்கு குறைந்தபட்ச வயது : 18 (கட்டாயம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments