ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் இயற்கை தந்த அருட்கொ டையாக சதுப்பு நில பகுதியில் கடல் நீரும், நன்னீரும் ஒன்று சேரும் இடத்தில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, கடல் பாசி உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதனால் இப்பகுதி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது.
அதன் அடிப்படையில் வனத்துறை காரங்காடு கிராம மக்களோடு இணைந்து காரங்காடு கிராமத்தில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவை அமைத்து சூழலியல் பூங்காவை உருவாக்கியுள்ளது. மேலும் இங்கு படகு சவாரி போன்ற சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
சதுப்பு நிலக்காட்டின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் சுமார் 2 கி.மீ. தூரம் படகு சவாரி வசதியும், 'கயாக்ளின்' எனப்படும் துடுப்பு படகு சவாரி, 'ஸ்நார்கிங்' எனப்படும் தண்ணீருக்கு அடியில் உள்ள உயிரினங்களை கண்டு ரசிப்பதற்கும், பொழுதுபோக்கு அம்சங்களையும் சூழலியல் பூங்கா உருவாக்கி உள்ளது. இங்கு படகு சவாரி செய்பவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், மித வைப்போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் சூழல் மேம்பாட்டு குழுவினர் மூலம் தரமான சுவையுடன் கூடிய உணவு வகைகள், மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யப்படும் கைவினைப்பொருட்கள் விற் பனை செய்யப்படுகிறது.
இங்குள்ள கடற்கரைகளிமண் பாங்கானதாக உள்ளது. இங்கு கோட்டை கரை ஆறு 3 பிரிவாக பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் இயற்கையான சதுப்பு நிலக்காடுகள் சுமார் 5 முதல் 7 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. இத னால் உப்புங்கழிகளின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள அலையாத்தி காடுகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஆழம் குறைவான இப்பகுதி அரிய வகை பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், தாவரங்களின் இருப்பிடமாக விளங்கின்றன. இங்கு ஏராளமான வெளி நாட்டு பறவைகள் முதல் உள்நாட்டு பறவைகள் வரை அதிக அளவில் வருகின்றன. வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து ஆண்டுதோறும் முட் டையிட்டு குஞ்சு பொரித்து செல்வது வழக்கம். இங்கு வரும் பறவைக ளின் அழகை கண்டு ரசிக்க வனத்துறை மூலம் உயர் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. சுற்றுலா பயணி கள் உயர் கோபுரத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து அலையாத்தி காடுகளின் அழ கையும், பறவைகளின் ரீங்கா ரத்தையும் ரசித்து செல்கின்ற னர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காரங்காடு சூழலியல் பூங்கா ஒரு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.