"குறைந்த கட்டணம்".. ஏசி + படுக்கை வசதி எஸ்இடிசி பஸ்கள் வாடகைக்கு கிடைக்கும்.. வெளியான குட்நியூஸ்




சுபநிகழ்ச்சி, கோவில்களில் தரிசனம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் பொதுமக்கள் ஏசி பஸ் மற்றும் ஏசியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட எஸ்இடிசி பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சுப நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பத்துடன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும்போது நாம் தனியார் வாகனங்களில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளோம். இதற்கு வாடகை பணம் நாம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் தான் எஸ்இடிசி எனும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அல்ட்ரா டீலக்ஸ், ஏசியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட பஸ்கள், ஏசி இல்லாத படுக்கை வசதி கொண்ட பஸ்களை பொதுமக்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் எஸ்இடிசி பஸ்களை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும். இந்த புதிய வசதி தொடர்பாக எஸ்இடிசி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்துகள் மற்றும் குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள்(UD, A/C Seater Cum Sleeper and Non A/C Seater cum Sleeper) தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோவில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

இந்த பேருந்து வசதி சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு மட்டுமின்றி, பிற இடங்களில் இருந்தும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9445014402, 9445014424, 9445014463 எனும் எண்களை தொடா்பு கொள்ளலாம்.” என்று அரசு விரைவுப் போக்குவர்தது கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments