புதுக்கோட்டை மாவட்டம், இராஜேந்திரபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கிளையில் 11.08.2024, ஞாயிற்றுக்கிழமையன்று, குடும்பவியல் தர்பியா தவ்ஹீத்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், இராஜேந்திரபுரம் கிளையில் 11.08.2024, ஞாயிற்றுக்கிழமையன்று, குடும்பவியல் தர்பியா தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர், ஹா.சித்திக் ரகுமான்.,B.E., அவர்கள்
தலைமை வகித்தார்கள்.

மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது மீரா, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுள்ளாஹ் மற்றும் கிளை நிர்வாகி அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

மேலும் TNTJ மாநிலச் செயலாளர் செங்கோட்டை
N.முஹம்மது ஃபைசல் மற்றும் TNTJ பேச்சாளர் மதுரை J.முகமது ஜுபைர் MISC அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

இறுதியாக மாவட்டச் செயலாளர் முகமது மீரான் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

மேலும்
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா 

1. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி அரசு முயற்சிக்கிறது,  வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை   இம்மசோதாவின் மூலம் அரங்கேற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசை இந்த தர்பியா (நல்லொழுக்க பயிற்சி கூட்டம்)  வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர்

2. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் சேதமடைந்துள்ளன


கடந்த பட்ஜெட்டில் எதிர்கட்சிகளின் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் காட்டிய பாரபட்சத்தை
இந்த பேரழிவின் போதும் தொடராமல் கேரள அரசு கேட்பது போல் தேசிய பேரிடராக அறிவித்து நிதி உள்ளிட்ட 
அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தர்பியா வாயிலாக
கேட்டுக்கொள்கிறோம்.


இஸ்ரேலின் அடக்குமுறைகள்

3. ஈரான் மண்ணில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத்தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார்
அரசியல் ரீதியான தீர்வை நோக்கி சீன மண்ணில் பாலஸ்தீனத்தின் மிதவாத பதாஹ் அமைப்பும் மற்றும் ஹமாஷ் அமைப்பும்
உடன்பாடு செய்து கொண்டிருந்த சூழலில் அமைதியை விரும்பாத இஸ்ரேலின் கரங்கள் இந்த கொலைக்குப்பிண்ணனியில் 
உள்ளது என செய்திகள் வருகின்றன, உலகின் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத இஸ்ரேல் எனும் நாட்டுடனான தூதரக உறவை 
இந்தியா துண்டித்து கொள்ள வேண்டும் என இந்த தர்பியா வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

வெள்ளை அறிக்கை வெளியிடுக

4.   தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு 
உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 
தமிழக அரசை இந்த தர்பியா (நல்லொழுக்க பயிற்சி கூட்டம்)  வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்

இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக

5. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் 
இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் ஏழு சதவீதம் அதிகரிக்க 
வேண்டும் என தமிழக அரசை இந்த தர்பியா (நல்ல ஒழுக்க பயிற்சி கூட்டம்)  வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்

போதை ஒழிப்பு நடவடிக்கைகள்

6. இந்தியா முழுவதும் போதை பொருள்களின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய, 
மாநில அரசுகள் வேடிக்கை மட்டும் பார்க்காமல் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களின் மீது   கடும் நடவடிக்கைகள் எடுக்க
 வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும் என இந்த தர்பியா வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments