புதுக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு




புதுக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேற்கூரை இடிந்து விழுவது வாடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 167 மாணவர்கள் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கட்டிடம் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. இதனால் அவ்வப்போது மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

அசம்பாவிதம் தவிர்ப்பு

பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளதால் மாணவர்களை வெளியில் அமர வைத்து பாடங்களை சொல்லித் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளியை திறக்க வரும்போது 7-ம் வகுப்பறையின் மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதையறிந்த பெற்றோர்களும் பள்ளி முன்பாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனடியாக பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கூடுதல் வகுப்பறையுடன் கட்டி தர வேண்டும் என்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பறையில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments