கீரனூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் கிளீனர் படுகாயம்




கோவையில் இருந்து தேவகோட்டை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 43) என்பவர் ஓட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த சவேரியார் மகன் சைமன் ராஜ் (30) என்பவர் கிளீனராக இருந்தார். பஸ் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் புறவழிச்சாலையில் வந்த போது, முன்னே சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் பஸ் மோதியது. இதில் சைமன் ராஜ் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments