GPM மக்கள் மேடை சார்பாக பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்வு




GPM மக்கள் மேடை சார்பாக பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கினார்கள். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை என்ற அமைப்பு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு GPM மக்கள் மேடை சார்பாக கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டங்களை வருடம் வருடமாக GPM மக்கள் மேடை சார்பாக செய்து வருகிறார்கள். இவ்விழாவில் GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் மேடை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். 

தகவல்
GPM மக்கள் மேடை ஆலோசனை குழு










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments