கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 78-வது சுதந்திர தின விழா




கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில்   78-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொடியேற்றப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிலுவைராஜ் அவர்கள் தலைமை வகித்தார், ஜமாத் பொருளாளர் மு. மு பஷிர்அலி  அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார். ஜமாத் தலைவர் RSM முகம்மது அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், முன்னாள் மாணவர்கள்,ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வு:1
பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்றார். 

நிகழ்வு:2
சிறப்பு விருந்தினர்கள் பள்ளியில் மரக்கன்றுகள் வைத்தார்கள். 

நிகழ்வு:3
பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஜமாத் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

நிகழ்வு:4
GPM மக்கள் மேடை சார்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் பன்னிரண்டு,பத்தாம் வகுப்பு முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு GPM மக்கள் மேடை சார்பாக  கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 

நிகழ்வு:5
பள்ளியின் முன்னாள் மாணவர் நூருல்லா அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments