முத்துக்குடா, ராவுத்தம்பட்டி கிராமங்களில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஈச்ச மரத்து காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு, நாலு பல் கன்று போன்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சின்ன மாடு பிரிவில் 32 மாட்டு வண்டிகளும், நாலு பல் கன்று குட்டி பிரிவில் 33 ஜோடி மாடுகளும் என மொத்தம் 78 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பந்தயத்தில் ஒன்றை ஒன்று முந்தி செல்ல மாட்டு வண்டிகள் பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்றதில் மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பணம், கேடயம் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
30 ஜோடி மாட்டு வண்டிகள்
திருமயம் அருகே கடியாபட்டி அடுத்த ராவுத்தம்பட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயம் சிறிய மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பரிவில் 8 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில் 22 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டி போக வர 8 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டுவண்டி போக வர 6 கிலோ மீட்டர் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பரிசு
கடியாபட்டியில் தொடங்கிய மாட்டு வண்டி பந்தயத்தில் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் சாரதிகளை உற்சாகப்படுத்தினர்.
இதையடுத்து பந்தயத்தில் ெவற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற கடியாபட்டி-ராயவரம் சாலையில் புதுக்கோட்டை, அரிமளம், திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான ரசிகர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.