தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கிய 40 மூடை கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது




கடற்கரையில் பதுக்கி வைத்த 40 மூடை கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் அட்டை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.வி.பட்டினம் கடற்கரை கிராமத்தில் ஜெட்டி பாலம் உள்ளது. இதன் அருகே மூடைகளில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் விரைந்து சென்று, சுமார் 40 மூடைகளில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர்.

ஒருவர் கைது

இதுதொடர்பாக கண்கொள்ளான்பட்டினத்தை சேர்ந்த முத்து செல்வம் (வயது38) என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 40 மூடை கடல் அட்டைகளையும், கைது செய்யப்பட்ட முத்துசெல்வத்தையும் வனத்துறை அதிகாரிகளிடம் தொண்டி போலீசார் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments