அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 150 புதிய சொகுசு பஸ்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 150 புதிய சொகுசு பஸ்களை, மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

150 சொகுசு பஸ்கள்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதிக்கொண்ட 200 புதிய சொகுசு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான பி.எஸ்.-6 ரக 150 புதிய சொகுசு பஸ்கள் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இந்த 150 புதிய சொகுசு பஸ்களின் இயக்கத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனையில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சிறப்பு அம்சம்

இந்த 150 சொகுசு பஸ்களின் சிறப்பு அம்சமாக பயணிகளின் சொகுசு பயணத்திற்காக பஸ்சின் முன்புறமும் ‘ஏர் சஸ்பென்ஷன்' வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் இரண்டு படுக்கைக்கு இடையே தடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக செல்போன் சார்ஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கண்டக்டர் தகவல்களை அறிவிப்பதற்காக ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் தீயை முன்கூட்டியே திறம்பட அனுமானித்து தீயை கட்டுப்படுத்தி அடக்கும் அமைப்பு (எப்.டி.எஸ்.எஸ்.) கருவி பொருத்தப்பட்டுள்ளது.

புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ள 150 சொகுசு பஸ்களில், 50 சொகுசு பஸ்கள் மாற்றுத்திறனாளிகள், மூதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக கீழ் படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வசதிகள் வேறு எந்த மாநில போக்குவரத்து கழகத்திலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள்

விழாவில், அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எந்தெந்த பணிமனைக்கு எத்தனை பஸ்கள்? தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக மக்கள் பயன்பாட் டிற்கு தொடங்கி வைக்கப்பட் டுள்ள 150 புதிய சொகுசு பஸ்கள் எந்தெந்த பணிம னைகளுக்கு. எத்தனை எண் ணிக்கையில் வழங்கப்பட்டுள் ளது என்ற விவரம் வருமாறு:- சென்னை கோயம்பேடு - 12 கிளாம்பாக்கம் 10 ஒசூர் - 10 புதுச்சேரி - 8 நாகை -8 கும்பக்கோணம் -8 தஞ்சாவூர் -2 காரைக்குடி -4 திருச்சி - 14 சேலம் - 4 கோவை - 4 திண்டுக்கல் -2 மதுரை -12 நெல்லை -14 செங்கோட்டை -8 தூத்துக்குடி - 12 நாகர்கோவில் -8 கன்னியாகுமரி - 4 மார்த்தாண்டம் -4 திருவனந்தபுரம் -2


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments