வானம் பார்த்த பூமி
ஆறுகளை இடைமறித்தே அணைகள் கட்டப்பட்டுள்ளன. சிறிய ஆறுகளில் தடுப்பணைகளும், கால்வாய்களும் உருவாக்கி பாசன நிலங்கள் வளப்படுத்தப்படுகின்றன. இது விவசாய வளர்ச்சிக்கும், மனிதரின் உணவுத் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
தமிழகத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்தவைதான் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள். மழை பெய்தால் மட்டுமே இங்கு விவசாயம் நடக்கும். மழை பொய்த்தால் விவசாயம் நடக்காது.
கல்லணைக்கால்வாய்
இப்பகுதிகள் வளம் பெற வேண்டியும், இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து சாகுபடி நடக்க வேண்டும் என்பதற்காகவும் வெட்டப்பட்டதுதான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய்.
தஞ்சை பெரியகோவில் கட்டிடக்கலையின் உச்சம்" என்றால் "தஞ்சை புது ஆறு பொறியியல் துறையின் உச்சம்" என்கின்றனர் பொறியியல் வல்லுனர்கள். கல்லணைக்கால்வாய், புதுஆறு, பிணந்தின்னி ஆறு, தஞ்சையின் தேம்ஸ் நதி என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது தஞ்சை கல்லணைக்கால்வாய்.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது மேட்டூர் அணையின் சிறப்பு திட்டம் என்று ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது இந்த கல்லணைக்கால்வாய். கல்லணைக்கால்வாய் 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டோடு(நேற்று) 90-வது வயதை நிறைவு செய்கிறது கல்லணைக் கால்வாய். இன்று(வியாழக்கிழமை) இந்த கல்லணைக்கால்வாய்க்கு 91-வது வயது பிறந்தது. இந்த கால்வாயை அன்றைய ஆங்கிலேய அரசின் ராணுவ பொறியாளர் கர்னல் டபிள்யூ. எம்.எல்லிஸ், இங்கிலாந்தின் தேம்ஸ் நதியை முன் னுதாரணமாக கொண்டு தஞ்சை நகரின் மத்தியில் ஆறு செல்வது போல் வடிவமைத்தார்.
ஆபத்தானது
கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில் 109 கி.மீ. நீளம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திர இந்திய அரசால் வெட்டப்பட்டவை.
இந்த ஏ கால்வாயில் இருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ ஆகும். குறிப்பாக கல்லணை தலைப்பில் தொடங்கி ஒரத்தநாடு அருகில் உள்ள வெட்டிக்காடு வரையிலான சுமார் 70 கி.மீ. மிகவும் ஆபத்தானதாக குறிப்பிடப்படுகிறது.
முழுக்க, முழுக்க பாசனத்துக்காக மட்டுமே இந்த கால்வாய் வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால் கல்லணைக்கால்வாயோ, மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து சென்று கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட. சமஉயர் கால்வாய்.
அதிவேக நீரோட்டம்
இதனால்தான் இந்த ஆறு தஞ்சை பெரிய கோவிலை ஒட்டி 30 அடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும். பக்கவாட்டிலும், தரையிலும் சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் திசைவேகம் அதிகமாக இருக்கும். மேலே காண்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே 2-3 மடங்கு அதிகமாக இருக்கும்.
இதனால் ஆற்றங்கரையோர மக்கள் இந்த ஆற்றை பிணந்தின்னி ஆறு என்கின்றனர். அதே நேரத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி பகுதிகளில் உள்ள விளை நிலங்களை செழுமைப்படுத்தி வரும் கல்லணைக்கால்வாய், விவசாயிகளின் கொடை என்றால் அது மிகையாகாது என்கின்றனர் விவசாயிகள். ஆக கல்லணைக்கால்வாய் விவசாயிகளின் வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.