புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மெய்யனூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், காரைக்குடியிலுள்ள ஒரு தனியார் டி.வி. விற்பனையாளரிடம் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி பெட்டியை ரூ.32 ஆயிரத்து 499-க்கு வாங்கினார். 2022-ம் ஆண்டு அந்த டி.வி. பழுதடைந்தது. இதுகுறித்து நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், புதிய டி.வி. மாற்றித்தரப்பட்டது. அந்த டி.வி.யும் 16 நாட்களில் பழுதடைந்தது. இதுபோல பல முறை பழுதடைந்த போது புகார் அளித்தும் டி.வி. நிறுவனத்தினரின் சேவை மையத்தில் இருந்து முறையான பதில் இல்லை. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிவக்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் சேகர் டி.வி.யை விற்ற விற்பனையாளரோ அல்லது டி.வி. நிறுவனத்தினரோ பழுதடைந்த டி.வி.யை மாற்றி புதிய டி.வி. வழங்க வேண்டும். டி.வி. வாங்கப்பட்ட தொகையை வாங்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும். சேவைக் குறைபாட்டுடன் செயல்பட்ட காரைக்குடியை சேர்ந்த விற்பனையாளர் ரூ.20 ஆயிரத்தை இழப்பீடாக நுகர்வோருக்கு வழங்க வேண்டும். சேவைக் குறைபாடுடன் செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த தனியார் டி.வி. உற்பத்தி நிறுவனத்தினர் ரூ.50 ஆயிரத்தை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். 45 நாட்களுக்குள் இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால், இழப்பீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.