நெல்லை டூ தூத்துக்குடிக்கு நேரடி ரயில்.. பயணிகள் பல வருட கனவு நிறைவேறுது.. வருது பாலருவி எக்ஸ்பிரஸ்




தூத்துக்குடி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை ரயில்வே நிறைவேற்றியுள்ளது. கேரளாவின் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி அமைச்சர் சுரேஷ் கோபி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து எது என்றால் ரயில்கள்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். வசதி படைத்தவர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு, டாய்லட் வசதி, கட்டணம் குறைவு உள்ளிட்ட ஆகியவை இருப்பதனால் பலரும் பஸ் பயணங்களை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்: 

தற்போதைய டிஜிட்டல் காலத்திற்கு ரயில்வேயும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை மேம்படுத்தி வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரயில்கள், ரயில் பெட்டிகள் அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே செய்து வருகிறது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மற்றும் கேரள பயணிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றப்பட இருப்பதாக ஒரு இனிப்பான செய்தி வெளியாகியிருக்கிறது.

வரும் 15 ஆம் தேதி: அதாவது கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16791, 16792) தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட இருப்பதா ரயில்வே வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 15 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க இருப்பதாக முன்னணி மலையாள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுரேஷ் கோபி தொடங்கி வைக்கிறார்:

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தொடர்ந்து பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் வரும் சுதந்திர தினம் அன்று அதாவது வரும் 15 ஆம் தேதி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16791, 16792) - தூத்துக்குடி வரை இயக்கப்படும். இந்த சேவையை கேரள எம்பியும், அமைச்சருமான சுரேஷ் கோபி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
 
கோரிக்கை ஏற்பு:

இந்த சேவை தொடங்கி வைக்கப்படுவதன் மூலம் திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே ரயில் சேவை இல்லாமல் இருந்த நிலையும் மாறும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை மட்டுமே இந்த ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன் பின்னர் பயணிகள் கோரிக்கையை அடுத்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.

எப்போது புறப்படும்?: பாலக்காட்டு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தூத்துக்குடிக்கு மறுநாள் காலை வந்து சேரும். நெல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடியை பொறுத்தவரை துறைமுகம், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இதனால், நெல்லை- தூத்துக்குடி ரூட்டில் அதிக அளவு பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை டூ தூத்துக்குடிக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு இதன்மூலம் நிறைவேற இருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments