மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாம் கட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பார்வையாளர்களுக்கான கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாம் கட்ட 50 சதவீதம் தொடக்க பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பார்வையாளர்களுக்கான கூட்டத்தினை மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திரு செழியன் அவர்கள் தலைமையில் தொடங்கியது. 

வட்டார கல்வி அலுவலர்  திரு அமுதா அவர்கள் மற்றும்  வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் 

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர் பயிற்றுநர் திரு பன்னீர்செல்வம்   அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறினார்

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர் பயிற்றுநர் திரு பன்னீர்செல்வம் அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறினார். 

இக்கூட்டத்தில் 17.8. 2024 அன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறுகின்ற இரண்டாம் கட்ட 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு உட்பட்ட பார்வையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் வெளிப்படையான ஜனநாயக முறையில் மறு கட்டமைப்பு நிகழ்வினை நடத்துவதில் பார்வையாளரின் பங்கு மிக முக்கியமானது என்றும், மறுக்கட்டமைப்பு முறை தொடர்பாக பின்பற்ற வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் நிகழ்ச்சி நிரலையும் பார்வையாளர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் மறுக்கட்டமைப்பு நாள் அன்று நிகழ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பார்வையாளர் பள்ளிக்கு சென்று விட வேண்டும் என்றும்,
 முதல்நாளே பள்ளிக்கு சென்று பார்வையிட்டு தேவைப்படும் அனைத்து முன்னேற்பாடுகளையும் நிறைவைடைந்து விட்டனவா என்று சரி பார்ப்பதும், நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு உதவுவதும் பார்வையாளரின் பங்கு மிக முக்கியமானது என்றும்  தகவல்கள் கூறப்பட்டது. 
மறுக்கட்டமைப்பு நிகழ்வு முழுவதும் நடந்து முடியும் வரை பார்வையாளர் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேவைப்படும் பொழுது தலைமை ஆசிரியருக்கு மறு கட்டமைப்பு நிகழ்வில் பார்வையாளர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மறுகட்டமைப்பு நிகழும் பொழுது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து அவர்களுடன் ஆலோசித்து அவரது கருத்துக்களையும் புரிந்து கொண்டு தீர்வு காண்பது நலம் என்பதும், மறு கட்டமைப்பு நிகழ்வு முடியும் தருவாயில் பார்வையாளர்களுக்கு தரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகல்களை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுநர் திரு சசிக்குமார் மற்றும் கணக்காளர் 
திரு கலைச்செல்வன் செய்திருந்தார்கள்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments