அதிராம்பட்டினத்தில், ரயில் வராமல் கேட் மூடப்பட்டதால் ரயில்வே ஊழியர்களிடம், வாகன ஓட்டிகள் வாக்குவாதம்




அதிராம்பட்டினத்தில் ரெயில் வராமல் கேட் மூடப்பட்டதால் ரெயில்வே ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மூடப்பட்ட ரெயில்வே கேட்

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்
கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராங்களில் இருந்து பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட் ரோப்பில் பழுது ஏற்பட்டதால் ரயில்வே கேட்டை மூடியுள்ளனர். இதனால் ரயில் வரப்போகுது என்று நினைத்துக் கொண்டு நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.

வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

ரயில்வே கேட் ரோப் கயிறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதை பார்த்து வாகன ஓட்டிகள் ஆத்திரம் அடைந்தது ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக காலை நேரங்களில் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள், மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். நேற்று திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இரவு நேரத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும் நேரத்தில் பழுது பார்க்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கலாம். அதை விட்டு விட்டு காலை நேரத்தில் ரயில்வே கேட்டை மூடி வைத்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments