ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
வேளாங்கண்ணி
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் நடக்கும் திருவிழாவிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி வேளாங்கண்ணியில் விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழா செப்டம்பர் 8-ந்தேதி நடக்கிறது.
இதனால் இந்த விழாவில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் இப்பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆண்டு தோறும் பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பக்தர்கள் கோரிக்கை
எனவே, பரமக்குடியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி S.P பட்டினம் மீமிசல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு பஸ்களை இயக்கினால் பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.