நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 31 நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
நாடு முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம். இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் அப்போது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1 முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 3 அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முதல் நாளே டோல்கேட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
சுங்கக் கட்டணம் உயர்கிறது:
இந்நிலையில், மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியது வரும்.
வரும் ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயனீட்டாளர் கட்டணத்தை உயர்த்த உள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் அதிகரிக்க உள்ளது.
எந்தெந்த சுங்கச்சாவடிகள்?:
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேகன் ஓமலூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. அதேபோல, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் மிக பிஸியான டோல்கேட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டோல்கேட் வசூல்:
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.4,221 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கக் கட்டண வசூலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேசம், இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா, நான்காவது இடத்தில் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக, லாரிகளில் ஏற்றி வரப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மனதிலும் எழுந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.