அறந்தாங்கியில் ரூ.46 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரம்; 6 தளங்களுடன் அமைகிறது.





அறந்தாங்கியில் ரூ.46 ேகாடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் 6 தளங்களுடன் அமைகிறது.

அரசு தலைமை மருத்துவமனை

 புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது.

தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டும் பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

மேலும் புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கியது. அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

6 தளங்களில் கட்டிடம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- அறந்தாங்கியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவ கட்டிடம் ரூ.46 கோடியில் கட்டப்படுகிறது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த கட்டிடம் அமைகிறது. இதில் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தரைதளம் தொடங்கி 4-வது தளம் வரை கட்டப்பட்டுள்ளன. 5-வது தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments