புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, காரைக்குடிக்கு ரெயில்வே சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பதில் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சீசன் டிக்கெட்
ரெயில்களில் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்க சீசன் டிக்கெட் முறை உள்ளது. இதில் ஒரு மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், ஆண்டு முழுவதும் என கால அளவிற்கு டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இந்த சீசன் டிக்கெட் குறிப்பிட்ட தூரத்தில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு இடையே வரம்பற்ற முறையில் பயணம் மேற்கொள்ள வழங்கப்படுகிறது. அன்றாடம் அலுவலக பணி, வேலை நிமித்தமாக அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் இந்த சீசன் டிக்கெட்டை எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.
இதில் டிக்கெட் கட்டண தொகை சற்று குறைவாக இருக்கும். தினசரி டிக்கெட் கட்டணத்தை கால அளவு சீசன் டிக்கெட்டுடன் ஒப்பிடும் போது பயணிகளுக்கு லாபம் தான். மேலும் காலவிரயம் குறைவதோடு, அன்றாட பயணத்தை பரபரப்பு இல்லாமல் பயணிக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் சீசன் டிக்கெட்டிற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.
பயணிகள் ஆர்வம்
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, காரைக்குடிக்கு அன்றாடம் அலுவலக பணி, வேலை நிமித்தம், தொழில் காரணமாக ரெயில்களில் பயணம் மேற்கொள்பவர்கள் சீசன் டிக்கெட் எடுத்து பயணிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக காரைக்குடி திருச்சி, திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரெயி–லில் காலை மற்றும் மாலை நேரத்தில் சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு சீசன் டிக்கெட் மாத கட்டணம் ரூ.235-ம், காரைக்குடிக்கு ரூ.185-ம் ஆகும். மேலும் சீசன் டிக்கெட்டை பெற்றவர்கள் குறிப்–பிட்ட மாதம் முடிந்ததும் புதுப்பித்து வருவதாகவும் ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆதார் அட்டை
ரெயில்வே சீசன் டிக்கெட் பெற பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எண்ணிக்கையிலும், ஆதார் அட்டை நகல் 2-ம் வழங்கி விண்ணப்பிக்க வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரெயிலில் கட்டணம் ரூ.15-ம், விரைவு ரெயிலில் முன்பதிவில்லா டிக்கெட் கட்டணம் ரூ.35ம் ஆகும். காரைக்குடிக்கு பயணிகள் ரெயிலில் கட்டணம் ரூ.10 ஆகும். ஒரு முறை பயணிக்க இந்த கட்டணத்தை சீசன் டிக்கெட்டில் எடுத்து பயணிப்பதை ஒப்பிடும் போது பயணிகளுக்கு டிக்கெட் கட்டண செலவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.