கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் புதிதாக உருவான மணல் திட்டு ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகள்




தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் மணல் பரப்பாக உள்ள பகுதியை ஆச்சரியத்துடன் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

அரிச்சல் முனை

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி கடல் பகுதி கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் உள்ள பகுதியாகும். அவ்வப்போது வீசும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக அரிச்சல்முனை பகுதியில் மணல் பரப்பும் முழுவதும் கடல் நீர் சூழ்ந்திருப்பதும், திடீரென கடல் நீர் வற்றி மணல் பரப்பாக மாறுவதும் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றிய பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே மணல் பரப்பே தெரியாத அளவிற்கு கடல் நீர் சூழ்ந்து இருந்து வந்தது.

மணல் திட்டு

இதனிடையே அரிச்சல்முனை வடக்கு கடல் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கடல் நீர் வற்றி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக மணல் திட்டு ஒன்று உருவானது போல் மணல் பரப்பாகவே காட்சியளித்து வருகின்றது.

கடல் நீரோட்டத்தால் கடல் நீர்வற்றி மணல் பரப்பாக இருந்து வரும் அப்பகுதியில் இறங்கி நின்று சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி செல்போனில் புகைப்படமும் எடுக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments