கட்டுமாவடியில் நரசிங்க காவிரி ஆற்றில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




கட்டுமாவடியில் நரசிங்க காவிரி ஆற்றில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேடு

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் நரசிங்க காவிரி ஆறு எனும் காட்டாறு உள்ளது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். காட்டாறு என்பதால் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் ஓடி கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் கட்டுமாவடி பஸ் நிறுத்தம் பின்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆற்றில் குப்பைகள் அதிகம் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது.

குப்பைகளை அகற்ற கோரிக்கை

காட்டாற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் வறண்டு கிடக்கிறது. இதில் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. அப்பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதில் பாலித்தீன் பைகளும் அதிகம் உள்ளன. மழைக்காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வாய்ப்பு உள்ளது. இதனால் நரசிங்க காவிரி ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அதில் குப்பைகளை தொடர்ந்து கொட்டப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments