புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் கணக்கெடுப்பு பணி சமீபத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர், நவீன ஸ்மார்ட் போன்கள், காதொலி கருவி, பார்வையற்றவர்களுக்கான நலத்திட்டங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுய தொழில் தொடங்க மானியமும், வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

23 ஆயிரம் பேர்

இதற்கிடையில் எந்தவொரு மாற்றுத்திறனாளிகளும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கணக்கெடுப்பு பணி மகளிர் திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் விடுபட்டுள்ளனர். இதனையும் ஆராய்ந்து மொத்த எண்ணிக்கை சேகரிக்கப்படும். ஏற்கனவே உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை விவரத்தில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments