அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் மண்டலாபிஷேகத்தைெயாட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, சின்னமாடு, புதுப்பூட்டு மாடு என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 84 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 26 மாட்டு வண்டிகளும், புதுப்பூட்டு மாடு பிரிவில் 49 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடுக்கு போக வர 8 கிலோ மீட்டரும், சின்ன மாடுக்கு போக வர 6 கிலோமீட்டரும், புதுப்பூட்டுமாடுக்கு போக வர 6 கிலோ மீட்டர் என பந்தயம் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது.

பரிசு

இதையடுத்து எல்கையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். பந்தயத்தில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கூடியிருந்து கண்டு களித்தனர். இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகுடி போலீசார் செய்து இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments