புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 160 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜான்சன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் மற்றும் குவிட்டோ (45), முருகானந்தம் (55), சுப்பிரமணி (47) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் 7 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்து முருகானந்தம் கடலில் தவறி விழுந்து மூழ்கினார். அவரை சக மீனவர்கள் போராடி மீட்டு விசைப்படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்ததும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர், ஆம்புலன்ஸ் வேனை தயாராக வைத்திருந்தனர். இந்த நிலையில் கரையில் முருகானந்தத்தை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடலில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.