ரூ.24 லட்சத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணி யூனியன் தலைவர் தொடங்கி வைத்தார்




திருவாடானை தாலுகா மங்கலக்குடியில் சீரான முறையில் குடிநீர் கிடைத்திட புதிய ஆழ்குழாய் அமைத்து தர வேண்டும் என மங்கலக்குடி ஜமாத் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த கருமாணிக்கம் எம்.எல்.ஏ. மங்கலக்குடி கிராமத்தில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து மங்கலக்குடியில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கியது.

முன்னதாக மங்கலக்குடி ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்கவும் பொது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் கிடைத்திடவும் பாத்தியா ஓதி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இப்பணியை திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மங்கலக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம், அரசு வக்கீல் கணேச பிரபு, ஒன்றிய கவுன்சிலர் ஜமால் மைதீன், ஜமாத் தலைவர் நசுருதீன், ஊராட்சி செயலாளர் பழனிகுமார் உள்பட ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments