ராமநாதபுரம் அருகே பகுதிநேர வேலை எனக்கூறி வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் நூதன மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி. ஊழியர்
ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பாலமுரளி (வயது 30). பெங்களூரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்த நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாலமுரளி வேலை தேடிக்கொண்டிருந்தபோது கடந்த ஜூன் மாதம் அவரின் செல்போனுக்கு வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலை மூலம் தினமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய பாலமுரளி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விவரம் கேட்டறிந்தார்.
அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் இணையதளத்தில் பிரபல ஓட்டல் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும். மேலும் பங்குகள் விற்பனைக்கு ஏற்ப அதிக அளவில் கமிஷன் தருவதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் தொகை
இதனை நம்பிய பாலமுரளி, மர்ம நபர் அளித்த இணைப்பின் உள்ளே சென்று ஓட்டல் நிறுவனங்களின் பங்குகளை தனது சொந்த பணத்தில் முதலீடு செய்து வாங்கி விற்பனை செய்துள்ளார். இதற்காக பல மடங்கு தொகை அவரின் பணிக்கான தனிக்கணக்கில் சேர்ந்துள்ளது. மேலும் பாலமுரளி வேலை பார்த்ததற்காக கூடுதல் தொகை ஊக்கத்தொகையாகவும் வழங்கி உள்ளனர்.
இவ்வாறு பாலமுரளி மேற்கண்ட பணிக்காக மொத்தம் ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 983-ஐ செலுத்தியுள்ளார்.
இதற்கான லாபத்தொகை லட்சக்கணக்கில் பாலமுரளியின் கணக்கில் சேர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனக்கு சேர்ந்த பணத்தினை எடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் மேற்கண்ட பணத்தினை பெற விதிமுறைகளின்படி சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர்.
சைபர் கிரைமில் புகார்
இதனால் தொடர்ந்து பணியை செய்ய முடியாமலும் சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாமலும் திணறிய பாலமுரளி இறுதியாக தான் செலுத்திய ரூ.16¼ லட்சத்தையாவது தந்து விடுங்கள் என்று கேட்டபோது கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே உங்களுக்கான தொகையை விடுவிக்க முடியும் என கூறியுள்ளனா்.
இதனால் சந்தேகம் அடைந்த பாலமுரளி, சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி பணம் செலுத்திய வங்கி கணக்குகளை முடக்கி அதில் இருந்த ரூ.20 லட்சத்து 58 ஆயிரத்து 333-ஐ மோசடி நபர்கள் எடுக்க முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.