அரசு பஸ் மீது கார் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி.. ராமநாதபுரம் அருகே சோகம்




ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. தர்ஷினா ராணி (8), பிரணவிகா (4) மற்றும் சில மாதங்களே ஆனை கைக்குழந்தை. இதில் 3 வது குழந்தையின் சிகிச்சைக்காக ராஜேஷ் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் சென்றிருக்கிறார். இதையடுத்து நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது காரில் ராஜேஷின் மனைவி, மாமியார், மாமனார் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். கார் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் நோக்கி வந்துகொண்டிருந்தது.


அப்போது உச்சிப்புள்ளி அருகே சாலையோரம் பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் வேகமாக வந்த கார் இந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த ராஜேஷ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனார் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது ராஜேஷ் மற்றும் அவரது குழந்தைகள் தர்ஷினா ராணி, பிரணவிகா, செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர்.

இதேபோல் ராஜேஷின் மனைவி மற்றும் கைக்குழந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அரசு பஸ்சில் பயணி ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பஸ்சை நிறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் மீது மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் 
பரபரப்பு ஏற்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments