புயல் சின்னம் எதிரொலியாக கீழக்கரையில் சூறாவளி காற்றால் சாலையை மூடிய மணல்




புயல் சின்னம் எதிரொலியாக கீழக்கரை பகுதியில் வீசிவரும் பலத்த சூறாவளி காற்றால் சாலையை மணல் மூடியது.

கடல் சீற்றம்

வங்க கடலில் ஆந்திராவில் இருந்து தென்கிழக்கு சுமார் 300 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் ஒன்று உருவாகி உள்ளது. புயல் சின்னம் உருவாகியதை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது நாளாக 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

சூறாவளி காற்று

மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீசிவரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சூறாவளி காற்று வீசி வருவதால் கீழக்கரை கடற்கரை சாலையில் பல இடங்களில் சாலையை மணல் மூடி உள்ளது.

இதேபோல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments