காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக செல்லும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் சேவையின் பெட்டிகள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
வண்டி எண் : 16361/62 வாரம் இருமுறை நிரந்தர ரயில் (BI - Weekly)
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:16361)
வண்டி எண் 16361 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை & திங்கட்கிழமை பகல் 1.00 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (வண்டி எண் : 16312)
மறுமார்க்கத்தில் வண்டி எண் 16362 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை & புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில் எங்கெங்கு நின்று செல்லும்?
எர்ணாகுளம்
கோட்டையம்,
செங்கனாசேரி,
திர்வல்லா,
செங்கனூர்,
மவெலிகரா,
காயங்குளம்,
கருநாகப்பள்ளி ,
சாஸ்தன்கோட்டா,
கொல்லம்,
குந்தரா,
கொட்டாரகர,
அவனீஸ்வரம்
புணலூர்,
தென்மலை,
செங்கோட்டை,
தென்காசி
கடையநல்லூர்,
சங்கரன்கோவில்,
ராஜபாளையம்,
சிவகாசி,
விருதுநகர்,
அருப்புக்கோட்டை,
மானாமதுரை,
காரைக்குடி,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,,
அதிராம்பட்டினம்,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
வேளாங்கண்ணி
ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிகள் அமைப்பில் மாற்றம்
கொல்லம் புனலூர் தென்காசி விருதுநகர் மானாமதுரை காரைக்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் சேவையின் பெட்டிகள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு 18-01-2025 முதல் இயக்கப்பட உள்ளது.
Existing Coach Position
Two tier AC. 1
Three tier. AC. 4
Sleeper. 9
GS. 2
SLRD 2
TOTAL 18 COACHES.
Revised Coach Position
Two tier AC. 1
Three tier. AC. 3
Sleeper. 8
GS. 2
SLRD 2
TOTAL 18 COACHES.
பயண தேவையுடையோர் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இரண்டாவது நிரந்தர ரயில்
வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது நிரந்தர விரைவு ரயில் சேவையாகும்.
எர்ணாகுளம் - வேளாங்கன்னி ரயிலை, நாள்தோறும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சிறப்பம்சங்கள் :
தமிழக பயணிகள் சபரிமலை செல்ல இந்த ரயில் ஒரு சிறந்த ரயில்.
இந்த இரயிலில் பயணித்து புனலூரில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் சபரிமலை செல்லலாம்.
கேரளாவில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த இரயில் சிறந்ததாக இருக்கும்.
தென்மாவட்டம்,டெல்டா மாவட்டம் மற்றும் கேரளா பக்தர்கள் வேளாங்கண்ணி, நாகூர் , திருநள்ளாறு மற்றும் திருவாரூர் , தென்காசி புனித தலங்களுக்கு செல்ல இந்த இரயிலை பயன் படுத்தலாம்.
இந்த இரயில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் இருமார்கத்திலும் புனலூர் - செங்கோட்டை மலை மற்றும் வனப்பகுதியில் செல்வதால்.சுற்றுலா பயணிகளுக்கு இந்த இரயில் சிறந்த அனுபவத்தை தரும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.