அதிராம்பட்டினம் அருகே குளத்தில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை... இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்..!




அதிராம்பட்டினம் அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோயில் குளத்தில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த தம்பிக்கோட்டை  ஐயப்பன் கோயில் குளத்தில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மிகவும் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த உறவுகள் ட்ரஸ்ட்  நிறுவனர் காலித் அஹ்மத், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சமீர், முஷரஃப், ஃபத்தாஹ் உள்ளிட்ட உட்பட சமூக ஆர்வல இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரின் அனுமதியுடன் குழந்தையின் உடலை மீட்டனர்.

குழந்தையின் உடல் மறு கூறாய்வு முடிந்த பின், போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உறவுகள் ட்ரஸ்ட், சமூக ஆர்வல இளைஞர்கள் நகராட்சி மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையை குளத்தில் வீசி சென்ற யார் என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pics Courtesy: Waha Views

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments