அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து துறை சாா்ந்த அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்திற்கு கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் பணிகள் நடந்து முடிந்தவை, அடுத்த மேற்கொள்ள வேண்டியவை உள்ளிட்டவை குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில், அப்துல்லா எம்.பி., கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments