முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது




புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. தடகளம், கைப்பந்து உள்பட தனிநபர் மற்றும் குழு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம் உள்பட ஆங்காங்கே நடைபெறுகிறது. 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களும், 17 முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்களும், 15 முதல் 35 வயது வரை உள்ள பொது பிரிவினர் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் இப்போட்டிகளில் பங்கேற்க மாவட்டத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments