ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை




சிக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பனையடிேயந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் ஜெயபாலன் (வயது 29). இவர் கரிமூட்டம் தொழில் செய்து வந்தார்.

இதேபோல ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த ஹக்கீம் சுல்தான் என்பவரது மகன் அப்துல் ஹலீன்(17), சின்னஏர்வாடி கிராமத்தை சேர்ந்த களஞ்சியம் மகன் சரீத்(17). இவர்கள் 2 பேரும் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்கள்.

நேற்று காலை கைப்பந்து விளையாடுவதற்காக அப்துல் ஹலீன், சரீத் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சிக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல ஜெயபாலன் பனையடிேயந்தல் செல்ல சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

சாவு

அப்போது எதிரே மாணவர்கள் வந்த மோட்டார்சைக்கிளும், ஜெயபாலன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்டதில் ஜெயபாலன், அப்துல் ஹலீன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சரீத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து சிக்கல் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments