நல வாரியத்தில் விண்ணப்பங்கள் பதிவை சரி செய்ய அவகாசம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், முடக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பெறுகின்றன. மாவட்டத்தில் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் மீதான குறைபாடுகளை தெளிவுரை கோரி தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்குறைபாடுகளை 10 நாட்களுக்குள் விரைந்து மீள சமர்ப்பித்து தொழிலாளர்கள் பயன்பெறுமாறு தொழிற்சங்கங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன. மேலும் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களுக்கு தெளிவுரை கோரி அனுப்பப்பட்ட குறைபாடுகளை அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தொழிற்சங்கங்கள் மூலமாகவோ சரி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவித்தொகைகள் பெற்று பயனடையுமாறு தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments