புதுக்கோட்டையில் மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்




புதுக்கோட்டையில் மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கெட்டுப்போன மீன்கள் 15 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை சந்தைபேட்டையில் மீன் மார்க்கெட் உள்ளது. இதேபோல மாநகரில் டி.வி.எஸ். கார்னர் அருகே உள்பட ஆங்காங்கே மீன்கடைகளில் வியாபாரம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை விரும்பிய இடங்களில் வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் அசைவப்பிரியர்கள் மீன்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். இதற்கிடையில் மீன் கடைகளில் பார்ம்லின் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

15 கிலோ மீன்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மீன் மார்கெட் மற்றும் நகர பகுதியில் உள்ள மீன் கடைகளில் மீன்களை பார்வையிட்டனர். இதில் ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்களை வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதில் சுமார் 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை அதிகாரிகள் அழித்தனர். மேலும் மீன் கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதற்கிடையில் கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், மீன்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments