கோபாலப்பட்டிணம் ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் விரைவாக நிரம்பி வரும் நெடுங்குளம்!




கோபாலப்பட்டிணம் ஜமாத் சார்பாக  அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் நெடுங்குளம் விரைவாக நிரம்பி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் என இரண்டு குளங்கள் மக்களின் அன்றாட தேவைகளான குளிக்க மற்றும் துணிகளை துவைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் நெடுங்குளத்திற்கு சில வருடங்களாக தண்ணீர் வர வேண்டிய வாய்க்கால் அடைப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் புதிதாக அமைந்த கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகம் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து நெடுங்குளத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் அடிப்படையில் கடந்த 19.07.2024 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின்னர் ஜமாத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில்  1080 அடியில் சுமார் 15 இலட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.  அதனைத்தொடர்ந்து இந்த ஆழ்துளை கிணற்றின் நிதி மற்றும் நிர்வாக  பொறுப்பாளர்களாக 26.07.2024 அன்று கீழ்க்கண்ட 5 நபர்கள் கமிட்டியாளர்களாக
1.RSM முகம்மது அன்சாரி
2.J.முகம்மது யூசுப்
3.M.முகம்மது மீராசா
4.M.ராஜா முகம்மது
5.KYN.சேக்காதி ராவுத்தர்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டனர். 
அதனைத்தொடர்ந்து 19.08.2024  ஆழ்துளை கிணறு அமைத்து சோலாரும் அமைக்கப்பட்டு 12.5 hp பேஸ் மோட்டார் பொருத்தப்பட்டது. 

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து நெடுங்குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டு விரைவாக நிரம்பி வருகிறது.

இதற்காக பொருளாதார உதவிகள் வழங்கிய மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் மென்மேலும் தங்களுடைய பொருளாதாரத்தில் பரக்கத் செய்வானக! 

இதற்காக இரவு, பகலாக உழைத்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கமிட்டியாளர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கவும், பொருளாதார உதவி செய்த மண்ணின் மைந்தர் அனைவரையும் GPM மீடியா சார்பாக மனதார பாராட்டுகிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments