திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பணியாற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசாரை பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம்
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பணிபுரிந்த 29 போலீசார், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பொன்னமராவதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா, ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, கே.புதுப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், அன்னவாசல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், விராலிமலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், அன்னவாசல் போலீஸ் ஏட்டு சின்னு, பொன்னமராவதி போலீஸ்காரர் பிரபு ஆகியோர் அரியலூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் விராலிமலை போலீஸ்காரர் செந்தில்குமார், ஆவுடையார்கோவில் போலீஸ்காரர் வினோத் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் ஆலங்குடி பிரதாப், மீமிசல் சுரேஷ், திருப்புனவாசல் மாரிமுத்து, இலுப்பூர் சதீஷ்குமார், விராலிமலை செல்வகுமார், இலுப்பூர் மூர்த்தி ஆகியோர் திருச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள்
பெரம்பலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு மகேந்திரன், சி.ஐ.யு. போலீஸ் ஏட்டு சரவணவேல், அரியலூர் கயர்லாபாத் போலீஸ் ஏட்டு குமரேசன், விக்கிரமங்கலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், இரும்புலி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி, போலீசார் உடையார்பாளையம் ராஜ்குமார், அரியலூர் ரஞ்சித்குமார், மீன்சுருட்டி பிரபாகரன், துவரங்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஜெபகுமார், புத்தாநத்தம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், வாத்தலை போலீஸ் ஏட்டு செல்லதுரை, வையம்பட்டி போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமார், உப்பிலியபுரம் போலீஸ் பவித்ரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தல்
திருச்சி மணிகண்டம் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், புதுக்கோட்டை கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால், ஆவுடையார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் துரைமுருகன் ஆகியோர் அரியலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம், அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் குமார், கீரனூர் சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராஜ் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் தளவாய் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கூவாகம் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி, இரும்புலி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன், ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகரன் பிறப்பித்துள்ளார். மேலும் அவர்கள் பொறுப்பேற்க போகும் மாவட்டத்தில் அவர்களுக்கு முக்கிய போலீஸ் நிலையங்கள் அல்லது முக்கிய பிரிவுகளில் பணி வழங்க வேண்டாம் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.