காலாண்டு விடுமுறையையொட்டி காரங்காடு சுற்றுலா மையத்தில் பயணிகள் படகு சவாரி




பள்ளி விடுமுறை நாட்களையொட்டி காரங்காடு சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

காரங்காடு சுற்றுலா மையம்

தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இயற்கை தந்த அருட்கொடையாக கடல்நீரும், நன்னீரும் ஒன்றுசேரும் ஆற்று முகத்துவாரத்தில் கண்ணுக்கு விருந்தாக அழகுடன் மாங்குரோவ் காடுகள் உள்ளன. வனத்துறையினர், காரங்காடு கிராம மக்கள் சார்பில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. இந்த சூழல் சுற்றுலா மையம் சார்பில் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு சவாரி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படகு சவாரி

குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பமாக வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி நேற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காரங்காடு கிராமத்தில் படகு சவாரி செய்ய குவிந்தனர்.

வனத்துறை சார்பில் இயக்கப்படும் 2 படகுகளில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து ஆற்று முகத்துவாரம், கடலுக்குள் சென்று மாங்குரோவ் காடுகளின் அழகை ரசித்து, செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் பல சுற்றுலா பயணிகள் கயாக்கிங் என அழைக்கப்படும் துடுப்பு படகுகளில் தனியாகவும், 2 பேர்களாகவும் துடுப்பு மூலம் படகை இயக்கி சவாரி செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments