S.P பட்டினம் அரசு பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீடீர் ஆய்வு





S.P பட்டினம் அரசு பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீடீர் ஆய்வு மேற்கொண்டார் 

ஆய்வு
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவாடானை சட்டமன்ற தொகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  

இதேபோல் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் சுந்தர பிரதீபா அவர்களிடம் கேட்டறிந்தார். பொதுத்தேர்வில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்தும் கேட்டறிந்தார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின்போது அமைச்சருக்கு எஸ்.பி.பட்டினம் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக செல்லும் பயணத்தின் 197ஆவது தொகுதியாக திருவாடானை அமைந்தது.

சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.கருமாணிக்கம் அவர்களின் திருவாடானை தொகுதிக்குட்பட்ட SP.பட்டினம் அரசு தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளியிலும் 234/77 திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டோம்.

மாணவர்கள் தன்னம்பிக்கையோடு மகிழ்ச்சியாக வாசிக்கின்றார்கள். பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சியை வழங்கி வருகின்றார்கள் இப்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும். பள்ளியின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் தெரிவித்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து விடைபெற்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments