புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம், ப்ரன்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் பெருநாவலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள், திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ் தலைமையில் அறந்தாங்கி போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து நகர வீதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை கல்லூரி முதல்வர் பேரா.பாலமுருகன் தலைமையில், அரசு தலைமை மருத்துவர் சேகர், ப்ரன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் வெங்கட்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில், வர்த்தக சங்க தலைவர் ரெ.தங்கதுரை தொடங்கி வைத்தார். முன்னதாக நகர வீதிகளில் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி செய்து பொதுமக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மண் வளத்தை கெடுக்கும். ஓசோனை ஓட்டை போடும். மண்ணில் மக்காத பிளாஸ்டிக்கை ஒழிப்போம். பொதுமக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம். மண் வளத்தை காப்போம் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் அறந்தாங்கி போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் ஜீவரெத்தினம், கார்த்திகேயன், அலைக்சான்ரியா, அங்கையர்கண்ணி மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், ப்ரன்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.