தொண்டியில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்




தொண்டி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கபீப் ராஜா, துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொண்டி பேரூராட்சியில் வணிக வளாகங்களுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்கவும், அதற்கான இடத்தை தேர்வு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பேரூராட்சி வார்டு எண் ஒன்றில் புதிதாக ரேஷன்கடை அமைப்பது, வார்டு பகுதிகளில் உள்ள ஊருணிகளில் படித்துறை அமைக்க வேண்டும். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் படகு சவாரி மையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அங்கீகாரம் வழங்க பரிந்துரை செய்வது, தொண்டி அலிஷ்நகர் பகுதியில் உள்ள சாலைகள், தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தெற்கு தோப்பில் புதிதாக ரேஷன்கடை அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்களது பகுதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments