தேவிபட்டினத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்ட நவாஸ்கனி எம்.பி.






காந்தி ஜெயந்தியையொட்டி தேவிபட்டினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஹமிதியா ராணி ஜாகிர் உசேன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் ராமநாதபுரம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கேத்ரின் மேள்சி, ஆணையாளர் செந்தாமரை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகானந்தவள்ளி, உதவி பொறியாளர் பாண்டி முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஆனந்தி செலவின பட்டியல் மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் தேவிபட்டினம் ஊராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் தொடர்ந்து கிடைப்பதில்லை எனவும், ஒரு நிமிடத்திற்கு 620 எல்.பி.எம் அளவில் கிடைக்கக்கூடிய தண்ணீர் தற்போது நிமிடத்திற்கு 90 எல்.பி.எம்.கொண்ட அளவு தண்ணீர் தான் கிடைக்கிறது.

இதுவும் சரியாக கிடைப்பதில்லை.சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இது குறித்து கேட்டால் தண்ணீர் இணைப்பு வரக்கூடிய குழாய்கள் சேதம் ஆகியுள்ளது. சரி செய்து தண்ணீர் வழங்குகிறோம் என்று கூறிவருகின்றனர். இதனால் தேவிபட்டினம் மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம் என்றனர்.

பின்னர் நவாஸ் கனி எம்.பி. கூறும் போது:-

தேவிபட்டிணம் ஊராட்சி மட்டும் இன்றி இந்த ஊராட்சியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைத்திட போதுமான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், ஊராட்சி துணை தலைவர் சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments