கோபாலப்பட்டிணம் நெடுங்குளத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றின் வரவு செலவு கணக்கு ஜமாத் நிர்வாகம் வெளியீடு





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் நெடுங்குளத்தில் சில வருடங்களாக தண்ணீர் வர வேண்டிய வாய்க்கால் அடைப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் புதிதாக அமைந்த கோபாலப்பட்டிணம்  நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த அடிப்படையில் 19.07.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. அதன்பிறகு 19.08.2024 ஆழ்துளை கிணறு அமைத்து சோலாரும் அமைக்கப்பட்டு 12.5Hp பேஸ் மோட்டார் பொருத்தப்பட்டது. தற்போது நெடுங்குளம் நிறைந்து வருகிறது. அந்த ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வரவு மற்றும் செலவு கணக்குகள் பொது தளத்தில் ஜமாத் நிர்வாகிகள் வெளியீட்டு உள்ளார்கள் அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஜமாத் பொருளாளர் அவர்களிடம் தாராளமாக அலுவலகத்திற்கு வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments