கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா அவர்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் M.L.A வலியுறுத்தல்!




கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா அவர்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் M.L.A வலியுறுத்தினார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 9 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்க ஆணை பிறப்பித்தமைக்கு மாண்புமிகு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அருமை அண்ணன் உயர்திரு. இ. பெரியசாமி அவர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. பொன்னையா இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, மேலும் 11 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கவும், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள நாட்டாணி – புரசக்குடி ஊராட்சியை இரண்டாக பிரித்து கோபாலபட்டிணம் ஊராட்சி, நாட்டாணி – புரசக்குடி ஊராட்சி என்றும், அதுபோல் ரெத்தினக் கோட்டை ஊராட்சியை இரண்டாக பிரித்து ரெத்தினக்கோட்டை ஊராட்சி என்றும் கூத்தாடிவயல் ஊராட்சி எனவும்  பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நேரில் சந்தித்து  (03.10.24) மீண்டும் வலியுறுத்தினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments