திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்பட 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம் அரசாணை வெளியீடு




திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்பட 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 மருத்துவக் கல்லூரிகளில் டீன் பணியிடங்கள் காலியாகவே இருந்து வந்தன. அந்த பதவியிடங்களில் பொறுப்பு டீன்களே பணியாற்றி கொண்டிருந்தனர். இந்தநிலையில் அந்த 14 பணியிடங்களுக்கும் புதிய டீன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

டாக்டர் பவானி

சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் பேராசிரியர் டாக்டர் சிவசங்கர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். அதே போல, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பவானி, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார், ஈரோடு மருத்துவக் கல்லூரிக்கும், நெல்லை மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ராமலட்சுமி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் பேராசிரியர் டாக்டர் குமரவேல், திருச்சி மருத்துவ கல்லூரிக்கும், மதுரை மருத்துவக் கல்லூரி இ.என்.டி. துறை பேராசிரியர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், மதுரை மருத்துவக் கல்லூரிக்கும், கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி உதவி டீன் டாக்டர் லியோ டேவிட், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

டாக்டர் ஜெயசிங்

நெல்லை மருத்துவக் கல்லூரி மயக்கவியல் பேராசிரியர் டாக்டர் அமுத ராணி, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கதிரியக்க நோயறிதல் துறை பேராசிரியர் டாக்டர் தேவி மீனாள், சேலம் மருத்துவ கல்லூரிக்கும், சென்னை மருத்துவக் கல்லூரி தோல் துறை பேராசிரியர் டாக்டர் கலைவாணி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இ.என்.டி. துறை பேராசிரியர் டாக்டர் முத்து சித்ரா, தேனி மருத்துவ கல்லூரிக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி உடற்கூறியல் பேராசிரியர் டாக்டர் லோகநாயகி, கரூர் மருத்துவக் கல்லூரிக்கும், கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெயசிங், விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கும், கோவை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் பேராசிரியர் டாக்டர் ரோகினி தேவி, வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும் டீன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments