இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் விடுதலை 4 மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம்




இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

18 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 4 படகுகளில் சென்ற 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் 18 மீனவர்களில் 5 மீனவர்கள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்து சிறைபிடிக்கப்பட்டு பின்னர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

13 பேர் விடுதலை

அதன்படி தண்டனை பெற்றவர்களில் 4 பேருக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மற்றொரு மீனவர் 2-வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 13 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்படுகின்றனர். மேலும், இவர்கள் 5 ஆண்டுகளில் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், அவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments